Saturday 15 May 2010

பிரின்சு என் ஆர் சமா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

2007இல் இந்தியா 20-20 உலகப்கோப்பை வென்ற பொழுது அய்யா பிரின்சு எழுதிய பதிவு இங்கே.

அவரு என்ன சொல்றாருன்னா, அணித் தலைவர் தோனி பார்ப்பனர் இல்லையாம் அதனால தான் இந்தியாவால கோப்பை ஜெயிக்க முடிஞ்சதாம். அய்யா ஒரு அணி ஜெயிக்கிறதுக்கும் தோக்குறதுக்கும் ஜாதி காரணம் இல்ல, திறமை தான் காரணம் - அது பார்பனரா இருந்தாலும் சரி வேறு யாரா இருந்தாலும் சரின்னு சொல்லிப் பார்த்தேன். எனக்கு அறிவு இல்ல, தெளிவா சொல்லிக் கொடுக்குறேன்னு சொன்னாரு...இது வரைக்கும் சொல்லல.

போன வருசம் இந்தியா தோத்ததும் அதே பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டு நியாபகப்படுத்தினேன். அத வெளியிடக் கூட முடியல நம்ம அய்யாவுக்கு. அதனால இங்கேயே கேக்குறேன் -

கடைசி ரெண்டு தடவையும் இந்தியாவினால செமி-பைனல் கூட போக முடியலையே, இப்போ என்ன அணித் தலைவர் தோனி பூனூல் போட ஆரம்பிச்சிட்டாரா என்ன?

அந்த வருசம் போப் மண்டையப் போட்டாரு அடுத்த வருசம் இந்தியா கோப்பை ஜெயிச்சதுன்னு சொல்லுறது மடத்தனம் தான் ஒத்துகிறேன். உங்க மடத்தனம் இப்போ உங்களுக்கு புரியுதா?

Saturday 3 April 2010

தமிழ் துரோகி முத்தையா முரளிதரன்.

கோவை சவுண்டு பார்ட்டி எல்லாம் முரளிக்கு சப்போர்ட்டு! அப்போ என்னை நம்பலை. இப்போ தெரியுதா?இவன் இந்தியத் துரோகி என்றால் எனக்கு கும்மி விழும். ஆனால் இவன் தமிழ் துரோகியாகவும் இருப்பது இப்பொழுது தெரியுதா?
யோசித்துப் பாருங்கள் - இன்றைய இராஜஸ்தனுக்கு எதிரான போட்டியில் நாலு ஓவரில் 52 ரன்கள். இந்தியாவிற்கு ஆகாத ஆஸியை சேர்ந்த போலிஞ்கர் சென்னை ஜெயிக்க வேண்டும் என்று விளையாடும் போது, தன்னால் முடிந்த வரையும் சென்னை தோற்க வேண்டும் என்ற ஆசை முரளிக்கு. இல்லா விட்டால் பஞ்சாபிற்க்கு எதிரான சூப்பர் ஓவரில் முதல் பந்தில் 6 ஓட்டங்கள் விட்டுத் தந்திருப்பாரா? அதிலும் யாருக்கு? மகிலே ஜெயவர்தனேவிற்க்கு!!! ஆம், இலங்கை அணியில் ஆடும் அதே மகிலே தான்!

Wednesday 10 October 2007

காப்பிரைட் திருடன் லக்கிலுக்

நம்ம லக்கிலுக் அண்ணாத்த காப்பிரைட் திருடன் தினமலர்! பதிவு போட்டு இருக்காரு. இதுல என்ன கொடுமைன்னா, தினமலர குறை சொல்லுற லக்கிலுக் profileல இருக்கிறது, லக்கி லூக் கதாபாத்திரத்தின் படம்! அவர் பேரு கூட திருட்டு தான். லக்கி லூக்கை லக்கிலுக்கா மாத்தி வச்சிருக்காரு.
அவரு தான் பகுத்தறிவு பகலவன் ஆச்சே, நியூமராலஜியா இருக்கும்

Monday 25 June 2007

இதுவும் கேப்பீங்க...

வாரமலர் இது உங்கள் இடம் பகுதியில அருப்புகோட்டை வாசகர் ஒருத்தர் நம்ம லாலு அய்யாகிட்ட ஒரு வேண்டுகோள் வச்சிருக்கார். நீங்களும் படிங்க

'டிவி' வச்சு குடுங்ளேன்!

சில தினங்களுக்கு முன் மதுரை-ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயிலில் பயணம் செய்யும் அனுபவம் எனக்கு கிடைத்தது. ஏறத்தாழ 2,500 கி.மீ., தூரத்தை 43 மணி நேரம் பயணம் செய்து டில்லி போய் சேர வேண்டயிருந்தது.
இதில் சங்கடம் என்னவென்றால், இந்த மிக நீண்ட நேரத்தை அலுப்பில்லாமல் சீட்டு விளையாடியே கழிப்பது; மற்றொன்று, நேரம் காலம் பார்க்காமல் தூங்கிக் கொண்டே கிடப்பது. இந்த இரண்டுமே செய்யாதவர்கள் பாடு ரொம்ப
ரொம்ப திண்டாட்டம் தான். மிக நீண்ட தூரம் பயணிக்கும் இது போன்ற ரயில் வண்டிகளில், தொலைக்காட்சி பொட்டிகளை பொருத்தினால் பயண அலுப்பு இல்லாமல் இனிதாய் அமையும்! ரயில்வே அமைச்சர் கவனிப்பாரா?

இத படிச்சதில இருந்து நமக்கு ஏகப்பட்ட யோசனை. குவாட்டர் அடிச்சி குப்பற படுத்து யோசிச்சாலும் ஒரு நல்ல ஐடியா கிடைக்கல. நீங்களும் கொஞ்சம் யோசிங்க.

நம்ம ரெயில்ல பார்தீங்கன்னா, பத்து பத்து படுக்கையா பிரிச்சி வச்சி இருப்பாங்க. இதுல எங்கனு டி.வி வைக்கிறது? ஒரு கம்பார்மென்டுக்கு ஒரு டி.வி வச்சா எல்லோரும் பார்க்க முடியாதே. நடுவில இருக்கிற தடுப்பு மறைக்குமே.

சரி பத்து படுக்கைக்கு ஒரு டி.வி வைக்கலாம்னா அதுலயும் பல சிக்கல். நம்ம ரயில் பெட்டியே ரொம்ப சிறுசு அதுல டி.வி வச்சிட்டா அப்பறம் எப்படி தூங்குறது? நம்ம மக்கள் ஒரு மாதிரி சமாளிச்சிடுவாங்கன்னு வச்சிகிட்டாலும், அவ்ளோ பக்கத்துல இருந்து டி.வி பார்த்தா கண்ணு கெட்டு போகாதா? அது மட்டும் இல்லாம, இதுக்கு எவ்ளோ செலவு ஆகும். அட செலவ விடுங்க அத்தன டி.வி பொட்டிக்கு எங்க போறது? ஊர்ல இருக்கிற டிவி எல்லாத்தையும் ஏற்கனவே யாரோ ஏழைகளுக்கு இலவசமா தரணும்னு வாங்கிட்டாங்களாம்.

சரி பேசாம ஒரு கம்பார்ட்மென்ட இதுக்குன்னு ஒதுக்கிடலாமா? அந்த கம்பார்ட்மென்ட்ல மட்டும் தான் டி.வி இருக்கும். சினிமா தியேட்டர் மாதிரி வரிசையா இருக்கை. தடுப்பு எதுவும் கிடையாது. தேவைன்னா அங்கே போய் பார்த்துக்கணும். ஆனா சன் டிவி போடணுமா, ஜெயா டிவி போடணுமா இல்ல கலைஞர் டிவி போடணுமான்னு பெரிய சண்டையே நடக்குமே அங்க! வெறும் தூர்தர்ஷன் மட்டும் தான் இருக்கும்னா, அத யாருமே பார்க்க மாட்டாங்களே.

ரெயில் போகிற இடத்துல எல்லாம் டிவி சிக்னல் கிடைக்குமா? ரெயில் மேல ஒரு டிஷ் ஆண்டெனா வைக்கணுமா இல்ல நீளமா ஒரு கேபிள் மாட்டணுமா இல்ல ரிக்கார்ட் பண்ணி வச்சி போடணுமா? ரெயில் மேல டிஷ் ஆண்டெனா வச்சா பாலத்துக்கு கீழ வண்டி போகும் போது தட்டாதா? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.

இதுக்கு பேசாம ஒவ்வொறு ரெயிலோட ஒரு டாஸ்மாக்னு கேட்டு இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்.

Monday 29 January 2007

குழப்பம் தீர்ந்தது (அ) குரு - ஒரு பகுத்தாய்வு

விமர்சனம் செய்வது (மட்டுமே) தமிழனின் நற்குணமாகும். குறிப்பாக ஒரு திரைபடத்தை பார்க்காமலே அதனை விமர்சிப்பது தமிழனின் தனி சிறப்பாகும் - தமிழுலக வரலாறு (பக்கம் 1911)

நேத்து மதியம் சாப்பிட்டுட்டு தூங்கலாம்னு நினைக்கும் போது நம்ம தம்பி வந்து குரு படம் பார்க்கலாம்னு இழுத்துகிட்டு போயிட்டான். சரி நம்ம மணிரத்னம் படம் தானே நல்லா இருக்கும்னு நானும் வாத்து மாதிரி போயிடேன். டிக்கெட் எடுத்த பிறகு தான் தெரிஞ்சது அது இந்தி படம்ன்னு. சப்-டைட்டில்ஸ் போடுறீங்களனு கேட்டதுக்கு டிக்கெட் கொடுக்கிறவர் வள்ளுனு குலைத்தார் (முதல் 16 தடவ கேட்கும் போது அமைதியா பதில் சொன்னவர் 17 வது தடவ மட்டும் ஏன் கத்தினார்னு புரியல).
படம் என்னவோ நல்லா தான் இருந்தாது. ஆனா எனக்கு ஒரே குழப்பம் படத்த பாக்குறதா இல்ல சப்-டைட்டில்ஸ் படிக்கிறாதானு. இத படிச்சா அது போயிடுது அத பார்த்தா இது போயிடுது ( நல்ல வேளை மல்லிகா ஷெராவத் பாட்டுக்கு சப்-டைட்டில்ஸ் இல்ல).
இந்த படத்தேட கதை, கதை சுருக்கம், திரை கதை, வசனம் எல்லாம் மத்த பதிவுல வந்து இருக்கும். அதனால அத பத்தி எல்லாம் எழுத போறது இல்ல. சில குறிப்புகள் மட்டும் இங்கே.
1) படம் நல்ல தான் இருக்கு ஆனா பாட்டு எதுவுமே கதையோட ஒட்டவே இல்ல (மல்லிகா ஷெராவத் பாட்டு ஒரு விதி விலக்கு - அட நிஜமாவே தான் சொல்லுறேன்!)
2) மிதுன் சக்ரபோர்திக்கு (மாணிக் தாஸ் நானாஜி குப்தா) ஏன் துருபாயோட -மன்னிக்கவும் குருபாயோட - அவ்வளவு கசமுசனு இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம் (னு தம்பி சொன்னான்)
3) க்ளைமாக்ஸ்ல கொஞ்சம் உப்பு,மஞ்சள், மிளகாய், சேர்த்திருக்கலாம் (இதுவும் தம்பி சொன்னது தான்)
4) ஒரு பெரிய சந்தேகம் - இந்த கதைக்கும் துருபாய் அம்பானிக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு மணி சார் எதுக்கு சொல்லனும்? அய்யா உங்க படம் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா உண்மைய சொல்லுரது தப்பா? நாயகன் படத்துக்கும் "God Father" படத்துக்கும் நூறு வித்யாசம் இருக்குனு சொன்னீங்க. இருவர் படம் முழுக்க முழுக்க கற்பனைனு சொன்னீங்க. ஆய்த எழுத்துக்கும் "Amores Perros"க்கும் ஏணி வச்சாலும் எட்டாதுனு சொன்னீங்க. இப்போ குருபாய் வேற துருபாய் வேறன்னு சொல்லுறீங்க.

கேக்கிறவன் கேனையனா இருந்தா...

குரோசவா "Ran" எடுக்கும் போது ஷேக்ஸ்பியரின் "King Lear" புதினத்தை தழுவி எடுக்கப்பட்டதுனு சொல்லிட்டுதான் எடுத்தார். ஜார்ஜ் லூகாஸ் "Star Wars" படத்தில் குரோசவாவின் "The Hidden Fortress" படத்தின் தாக்கம் உள்ளது என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அந்த படம் எல்லாம் ஓடலையா என்ன? இல்ல அவங்கள எல்லாம் நல்ல இயக்குனர் இல்லனு சொல்லிட்டாங்களா?

பின்குறிப்பு: என்னடா ஏதோ பகுத்தாய்வுனு சொல்லிட்டு என்னமோ பேசி இருக்கானேனு பாக்குறீங்களா? இப்போ எல்லாம் பகுத்தாய்வு திறனாய்வுனு எழுதினா தானே மக்கள் படிக்கிறாங்க. அதான். என்ன நான் சொல்லுறது?

குழப்பம்

மூளையை கஞ்சா கசக்குற மாதிரி கசக்கி வலைபதிவுக்கு பெயர் வச்சாச்சு. ஆனா என்ன எழுதுறதுன்னு தெரியலையே....!