Monday 29 January 2007

குழப்பம் தீர்ந்தது (அ) குரு - ஒரு பகுத்தாய்வு

விமர்சனம் செய்வது (மட்டுமே) தமிழனின் நற்குணமாகும். குறிப்பாக ஒரு திரைபடத்தை பார்க்காமலே அதனை விமர்சிப்பது தமிழனின் தனி சிறப்பாகும் - தமிழுலக வரலாறு (பக்கம் 1911)

நேத்து மதியம் சாப்பிட்டுட்டு தூங்கலாம்னு நினைக்கும் போது நம்ம தம்பி வந்து குரு படம் பார்க்கலாம்னு இழுத்துகிட்டு போயிட்டான். சரி நம்ம மணிரத்னம் படம் தானே நல்லா இருக்கும்னு நானும் வாத்து மாதிரி போயிடேன். டிக்கெட் எடுத்த பிறகு தான் தெரிஞ்சது அது இந்தி படம்ன்னு. சப்-டைட்டில்ஸ் போடுறீங்களனு கேட்டதுக்கு டிக்கெட் கொடுக்கிறவர் வள்ளுனு குலைத்தார் (முதல் 16 தடவ கேட்கும் போது அமைதியா பதில் சொன்னவர் 17 வது தடவ மட்டும் ஏன் கத்தினார்னு புரியல).
படம் என்னவோ நல்லா தான் இருந்தாது. ஆனா எனக்கு ஒரே குழப்பம் படத்த பாக்குறதா இல்ல சப்-டைட்டில்ஸ் படிக்கிறாதானு. இத படிச்சா அது போயிடுது அத பார்த்தா இது போயிடுது ( நல்ல வேளை மல்லிகா ஷெராவத் பாட்டுக்கு சப்-டைட்டில்ஸ் இல்ல).
இந்த படத்தேட கதை, கதை சுருக்கம், திரை கதை, வசனம் எல்லாம் மத்த பதிவுல வந்து இருக்கும். அதனால அத பத்தி எல்லாம் எழுத போறது இல்ல. சில குறிப்புகள் மட்டும் இங்கே.
1) படம் நல்ல தான் இருக்கு ஆனா பாட்டு எதுவுமே கதையோட ஒட்டவே இல்ல (மல்லிகா ஷெராவத் பாட்டு ஒரு விதி விலக்கு - அட நிஜமாவே தான் சொல்லுறேன்!)
2) மிதுன் சக்ரபோர்திக்கு (மாணிக் தாஸ் நானாஜி குப்தா) ஏன் துருபாயோட -மன்னிக்கவும் குருபாயோட - அவ்வளவு கசமுசனு இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம் (னு தம்பி சொன்னான்)
3) க்ளைமாக்ஸ்ல கொஞ்சம் உப்பு,மஞ்சள், மிளகாய், சேர்த்திருக்கலாம் (இதுவும் தம்பி சொன்னது தான்)
4) ஒரு பெரிய சந்தேகம் - இந்த கதைக்கும் துருபாய் அம்பானிக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு மணி சார் எதுக்கு சொல்லனும்? அய்யா உங்க படம் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா உண்மைய சொல்லுரது தப்பா? நாயகன் படத்துக்கும் "God Father" படத்துக்கும் நூறு வித்யாசம் இருக்குனு சொன்னீங்க. இருவர் படம் முழுக்க முழுக்க கற்பனைனு சொன்னீங்க. ஆய்த எழுத்துக்கும் "Amores Perros"க்கும் ஏணி வச்சாலும் எட்டாதுனு சொன்னீங்க. இப்போ குருபாய் வேற துருபாய் வேறன்னு சொல்லுறீங்க.

கேக்கிறவன் கேனையனா இருந்தா...

குரோசவா "Ran" எடுக்கும் போது ஷேக்ஸ்பியரின் "King Lear" புதினத்தை தழுவி எடுக்கப்பட்டதுனு சொல்லிட்டுதான் எடுத்தார். ஜார்ஜ் லூகாஸ் "Star Wars" படத்தில் குரோசவாவின் "The Hidden Fortress" படத்தின் தாக்கம் உள்ளது என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அந்த படம் எல்லாம் ஓடலையா என்ன? இல்ல அவங்கள எல்லாம் நல்ல இயக்குனர் இல்லனு சொல்லிட்டாங்களா?

பின்குறிப்பு: என்னடா ஏதோ பகுத்தாய்வுனு சொல்லிட்டு என்னமோ பேசி இருக்கானேனு பாக்குறீங்களா? இப்போ எல்லாம் பகுத்தாய்வு திறனாய்வுனு எழுதினா தானே மக்கள் படிக்கிறாங்க. அதான். என்ன நான் சொல்லுறது?

குழப்பம்

மூளையை கஞ்சா கசக்குற மாதிரி கசக்கி வலைபதிவுக்கு பெயர் வச்சாச்சு. ஆனா என்ன எழுதுறதுன்னு தெரியலையே....!