Monday 25 June 2007

இதுவும் கேப்பீங்க...

வாரமலர் இது உங்கள் இடம் பகுதியில அருப்புகோட்டை வாசகர் ஒருத்தர் நம்ம லாலு அய்யாகிட்ட ஒரு வேண்டுகோள் வச்சிருக்கார். நீங்களும் படிங்க

'டிவி' வச்சு குடுங்ளேன்!

சில தினங்களுக்கு முன் மதுரை-ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயிலில் பயணம் செய்யும் அனுபவம் எனக்கு கிடைத்தது. ஏறத்தாழ 2,500 கி.மீ., தூரத்தை 43 மணி நேரம் பயணம் செய்து டில்லி போய் சேர வேண்டயிருந்தது.
இதில் சங்கடம் என்னவென்றால், இந்த மிக நீண்ட நேரத்தை அலுப்பில்லாமல் சீட்டு விளையாடியே கழிப்பது; மற்றொன்று, நேரம் காலம் பார்க்காமல் தூங்கிக் கொண்டே கிடப்பது. இந்த இரண்டுமே செய்யாதவர்கள் பாடு ரொம்ப
ரொம்ப திண்டாட்டம் தான். மிக நீண்ட தூரம் பயணிக்கும் இது போன்ற ரயில் வண்டிகளில், தொலைக்காட்சி பொட்டிகளை பொருத்தினால் பயண அலுப்பு இல்லாமல் இனிதாய் அமையும்! ரயில்வே அமைச்சர் கவனிப்பாரா?

இத படிச்சதில இருந்து நமக்கு ஏகப்பட்ட யோசனை. குவாட்டர் அடிச்சி குப்பற படுத்து யோசிச்சாலும் ஒரு நல்ல ஐடியா கிடைக்கல. நீங்களும் கொஞ்சம் யோசிங்க.

நம்ம ரெயில்ல பார்தீங்கன்னா, பத்து பத்து படுக்கையா பிரிச்சி வச்சி இருப்பாங்க. இதுல எங்கனு டி.வி வைக்கிறது? ஒரு கம்பார்மென்டுக்கு ஒரு டி.வி வச்சா எல்லோரும் பார்க்க முடியாதே. நடுவில இருக்கிற தடுப்பு மறைக்குமே.

சரி பத்து படுக்கைக்கு ஒரு டி.வி வைக்கலாம்னா அதுலயும் பல சிக்கல். நம்ம ரயில் பெட்டியே ரொம்ப சிறுசு அதுல டி.வி வச்சிட்டா அப்பறம் எப்படி தூங்குறது? நம்ம மக்கள் ஒரு மாதிரி சமாளிச்சிடுவாங்கன்னு வச்சிகிட்டாலும், அவ்ளோ பக்கத்துல இருந்து டி.வி பார்த்தா கண்ணு கெட்டு போகாதா? அது மட்டும் இல்லாம, இதுக்கு எவ்ளோ செலவு ஆகும். அட செலவ விடுங்க அத்தன டி.வி பொட்டிக்கு எங்க போறது? ஊர்ல இருக்கிற டிவி எல்லாத்தையும் ஏற்கனவே யாரோ ஏழைகளுக்கு இலவசமா தரணும்னு வாங்கிட்டாங்களாம்.

சரி பேசாம ஒரு கம்பார்ட்மென்ட இதுக்குன்னு ஒதுக்கிடலாமா? அந்த கம்பார்ட்மென்ட்ல மட்டும் தான் டி.வி இருக்கும். சினிமா தியேட்டர் மாதிரி வரிசையா இருக்கை. தடுப்பு எதுவும் கிடையாது. தேவைன்னா அங்கே போய் பார்த்துக்கணும். ஆனா சன் டிவி போடணுமா, ஜெயா டிவி போடணுமா இல்ல கலைஞர் டிவி போடணுமான்னு பெரிய சண்டையே நடக்குமே அங்க! வெறும் தூர்தர்ஷன் மட்டும் தான் இருக்கும்னா, அத யாருமே பார்க்க மாட்டாங்களே.

ரெயில் போகிற இடத்துல எல்லாம் டிவி சிக்னல் கிடைக்குமா? ரெயில் மேல ஒரு டிஷ் ஆண்டெனா வைக்கணுமா இல்ல நீளமா ஒரு கேபிள் மாட்டணுமா இல்ல ரிக்கார்ட் பண்ணி வச்சி போடணுமா? ரெயில் மேல டிஷ் ஆண்டெனா வச்சா பாலத்துக்கு கீழ வண்டி போகும் போது தட்டாதா? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.

இதுக்கு பேசாம ஒவ்வொறு ரெயிலோட ஒரு டாஸ்மாக்னு கேட்டு இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்.

No comments: